கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

கஞ்சா-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை பெரிய பாலம் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மலையப்பநகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 21) என்பவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீதர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாபறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் குளித்தலை பஸ் நிலையம் பகுதியில் மளிகை கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்றதாக குளித்தலை பாரதிதாசன் தெருவை சேர்ந்த கணேசன் (55) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது கடையில் இருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story