மதுபானம் விற்ற 2 பேர் கைது


மதுபானம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Feb 2023 12:15 AM IST (Updated: 20 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி அல்லிநகரத்தில் மதுபானம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேனி அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அன்னஞ்சி விலக்கு அருகே கையில் பாட்டில்களுடன் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்தியதில் அவர்கள் அல்லிநகரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 27), மதுராபுரியை சேர்ந்த ராமமூர்த்தி (43) என்பதும், மதுபானம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story