லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
இலுப்பூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் இலுப்பூர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலுப்பூர் பகவதியம்மன் கோவில் தெருவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த புங்கினிப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 58), அதேபகுதியை சேர்ந்த மற்றொரு கிருஷ்ணமூர்த்தி (65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகள், செல்போன், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.8,500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story