லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

வேதாரண்யத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் இங்கா்சால் மற்றும் போலீசார் தோப்புத்துறை, தேத்தாகுடி பகுதி மெயின்ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதி கடைவீதி அருகே லாட்டரி சீட்டு விற்ற தோப்புத்துறை பகுதியை சேர்ந்த வினோத் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 98 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.900 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதேபோல ஆறுமுகச்சந்தி பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற கள்ளிமேடு பகுதியை சோ்ந்த கதிர்வேலை(52) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.400 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய முஜிபுர் ரகுமானை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story