லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

நச்சலூர் அருகே உள்ள இனுங்கூர் பகுதியில் குளித்தலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இனுங்கூர் காசா காலனியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் அதே பகுதியை சேர்ந்த கமலேஷ் (வயது 23), பிரவீன் (32) ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story