லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
குளித்தலை சுங்ககேட் மற்றும் பெரிய பாலம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் சுங்ககேட் பஸ் நிறுத்தம் அருகே குளித்தலை மேற்கு மடவாளர் தெருவை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 30), பெரிய பாலம் பஸ் நிறுத்தம் அருகே மீன்கார தெருவை சேர்ந்த முகமதுரபி (55) ஆகியோர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த தலா ரூ.200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story