லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளி பஸ் நிறுத்தம் மற்றும் கடம்பர்கோவில் கடைவீதி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக வந்ததகவலின்பேரில், குளித்தலை போலீசார் அந்த பகுதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற தண்ணீர்பள்ளி பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது 65), குளித்தலை மேற்கு மடவாளர் தெருவை சேர்ந்த சந்தோஷ்குமார் (33) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.400 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story