லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம் கல்லுகுடியிருப்பு பகுதியில் கே.புதுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 32), முருகன் (48) என்பதும் அவர்கள் அரசு தடை செய்த லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.7 ஆயிரம், செல்போன், லாட்டரி நம்பர் எழுத பயன்படுத்திய டைரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 2 பேரையும் கே.புதுப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story