ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
சேலம்
வாழப்பாடி:-
வாழப்பாடி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை போலியாக தயார் செய்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாழப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.
இதில், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் குடியிருக்கும் விக்னேஷ் (வயது 24), பி.எஸ்.என்.எல். குடியிருப்பு பகுதியில் வசிக்கும் சேகர் (56). ஆகிய இருவரும் ஆன்லைன் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story