லாட்டரி-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

லாட்டரி-புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

குளித்தலை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளித்தலை கடைவீதி பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற வைகைநல்லூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த செல்வம் (வயது 52) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் குளித்தலை அருகே உள்ள வடக்கு புதூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த இளையராஜா (வயது 39) என்பவர் தனது பெட்டி கடையில் வைத்து புகையிலை பொருட்களை விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்காக வைத்திருந்த புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story