கும்பகோணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


கும்பகோணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

கும்பகோணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர்

கும்பகோணம்

கும்பகோணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7½ பவுன் நகைகள், செல்போன்கள், மோட்டார்சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தனிப்படை அமைப்பு

கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல்வேறு வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வந்தன. வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகேசன், பேபி ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் கும்பகோணம் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த வழிப்பறி தொடர்பான காட்சிகளை ஆய்வு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை சேகரித்தனர்.

2 பேர் கைது

இந்த தகவலின் பேரில் கும்பகோணம் பகுதியில் தொடர் வழிப்பறியில் திருவிடைமருதூர் அம்மாசத்திரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் சரவணகுமார், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கூந்தலூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன் தினேஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது. அந்த 2 பேரையும் போலீசார் தேடிவந்தனர்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 7½ பவுன் நகைகள், 7 விலை உயர்ந்த செல்போன்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story