மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
தஞ்சை மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவியை வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். இதனால் அவர் தனது மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளை திருடியதாக ஆதனூரை சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது30), நெய்விளக்கை சேர்ந்த புருஷோத்குமார்ராஜ்(27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story