செல்போன் திருடிய 2 பேர் கைது


செல்போன் திருடிய 2 பேர் கைது
x

செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள மல்லாபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), பெட்ரோல் பங்க் ஊழியர். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்போது 2 மர்ம ஆசாமிகள் ராஜ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இதையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பிடித்து மங்களமேடு போலீசில் ராஜ்குமார் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் அன்னமங்கலம் பகுதியை சேர்ந்த தமிழரசன் (23), செஞ்சேரியை சேர்ந்த வெற்றிவேல் (23) என்பதும், இவர்கள் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story