காப்பர் கம்பிகள் திருடிய 2 பேர் கைது
சேலம்
சேலம் சுவர்ணபுரி பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 45). இவர் அழகாபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். விஜயன், கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் 500 மீட்டர் மின்சார காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது காப்பர் கம்பிகளை ரெட்டியூரை சேர்ந்த திவாகர், ஜீவானந்தம் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Next Story