மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது
மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி போலீஸ்காரர் கஜேந்திரன் சம்பவத்தன்று பெருமாள்நகர் பகுதியில் ரோந்து பணியில் இருந்தார். அப்போது மோட்டார்சைக்க்ிளில் வந்த 2 பேரை நிறுத்த முயற்சி செய்தார். அப்போது 2 பேரும் மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்த நபர்கள் மீது சந்தேகமடைந்த அவர் தனது மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தார்.
அப்போது அவர்களிடம் மின்மோட்டார் இருந்தது தெரியவந்தது. 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்ததில் 2 பேரும் தாதன்குளத்தை சேர்ந்த ஆனந்த் (வயது 26), சுடலைமுத்து (41) என்பதும், மின்மோட்டார் முன்னீர்பள்ளம் ேபாலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செங்குளம் தனியார் கல்லூரியில் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இருவரையும் முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் துரிதமாக செயல்பட்டு குற்றவாளி களை மடக்கிப்பிடித்த கஜேந்திரனை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.