மின் கம்பியை திருடிய 2 பேர் கைது


மின் கம்பியை திருடிய 2 பேர் கைது
x

மின் கம்பியை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

காட்டுப்புத்தூர் அருகே உள்ள உன்னியூர் மேலத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (வயது 67). இவருக்கு தோட்டத்தில் மின் மோட்டாருக்கு செல்லும் மின்கம்பியை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் கம்பியை திருடியதாக வாள்வேல்புத்தூர் அண்ணா நகர் மேற்கு பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் உமாச்சந்திரன் (29), எம்.களத்தூர் ரெட்டியார் தெருவை சேர்ந்த ராவணன் மகன் புருஷோத்தமன் (34) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story