கல்லூரி வளாகத்தில் திருடிய 2 பேர் கைது


கல்லூரி வளாகத்தில் திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:41 PM IST)
t-max-icont-min-icon

தேவதானப்பட்டி அருகே கல்லூரி வளாகத்தில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளபுரத்தில் தனியார் மேலாண்மை தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி வளாகத்தில் மாந்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் இந்த தோட்டத்திற்கு பணியாளர்கள் சென்றனர். அப்போது மறுகால்பட்டியை சேர்ந்த பாக்கியம் (வயது 35), சுப்புராம் (40) மற்றும் சிலர் மாமரத்தில் மாங்காய் பறித்துக் கொண்டிருந்தனர்.

பணியாளர்கள் வருவதை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். பின்னர் சோதனை செய்தபோது அங்கிருந்த 200 அடி நீள முள் கம்பி மற்றும் 400 மீட்டர் மின் வயர் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பாக்கியம், சுப்புராம் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.


Next Story