ஆடுகள் திருடிய 2 பேர் கைது
மயிலம் பகுதியில் ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலம்,
மயிலம், புதுச்சேரி சாலையை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சம்பத் (வயது 32). இவருக்கு சொந்தமான ஒரு ஆட்டை நேற்று முன்தினம் இரவு திருடிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஆட்டை திருடியது தொடர்பாக மயிலம் அடுத்த பாதிராபுலியூர் கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் மகன் மணிகண்டன் (28) மற்றும் சுந்தரம் மகன் ரத்தினகுமார் (27) என்பது தெரிந்தது. மேலும் இவர்கள் வேங்கை கிராமத்தை சேர்ந்த தீர்த்தமலைக்கு சொந்தமான 8 ஆடுகள், அன்னம்புத்தூர் ஜெயக்குமாருக்கு சொந்தமான 5 ஆடுகள் மற்றும் மயிலம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான ஒரு ஆட்டையும் திருடிச்சென்றது தெரிந்தது. மதுகுடிக்க பணம் தேவைபடும்போது எல்லாம் ஆடுகள் திருடியதும் போலீ்ஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 ஆடுகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.