கோபி அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
கோபி அருகே ஆடு திருடிய 2 பேர் கைது
ஈரோடு
கடத்தூர்
கோபி அருகே உள்ள நொறுக்குப்பாறை மேட்டை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 50) விவசாயி. மேலும் இவர் தன்னுடைய ஆட்டுப்பட்டியில் 400 ஆடுகளை வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஆட்டுப்பட்டியில் இருந்து திடீரென ஆடுகள் சத்தம் போட்டு கத்தின. உடனே அவர் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்து பார்த்தார். அப்போது 2 பேர் 2 ஆட்டுக்குட்டிகளை திருடிக்கொண்டு செல்ல முயன்றனர். உடனே அவர் திருடன், திருடன் என சத்தம் போட்டு கத்தினார். மேலும் அவர்கள் 2 பேரையும், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தார். பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் போடி சின்னாம்பாளையத்தை சேர்ந்த கோபிநாத் (வயது40), மூலவாய்க்காைல சேர்ந்த தமிழ்செல்வன் (42),' என தொியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story