இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது
இரும்பு பொருட்கள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழி வடக்கு தெருவை சேர்ந்தவா் இசக்கிமுத்து (வயது 52). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இதற்காக கல்லாமொழி மெயின் ரோட்டில் சொந்தமாக லாரி புக்கிங் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வைத்து உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இசக்கிமுத்து தனது அலுவலகத்தை பூட்டுவிட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்த போது ரூ.74 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருட்டு போனது ெதரியவந்தது.
இதுகுறித்து அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கல்லாமொழியை சேர்ந்த கண்ணன் (34), மகாராஜன் (75) ஆகியோர் இரும்பு பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார்.