இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது
கங்கைகொண்டான் அருகே இரும்பு பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள துறையூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜோசப் ராஜ் (வயது 37). இவர் சிப்காட் பகுதியில் கல் உடைக்கும் கிரசர் ஆலை தொழில் செய்து வருகிறார். குத்தகை காலம் முடிந்த நிலையில் கிரசரை புதுப்பிப்பதற்காக ஜோசப்ராஜ் அங்குள்ள எந்திரம் பழுதுகளை சரிபார்த்து வந்தார். இந்த நிலையில் ஆலை வளாகத்தில் வந்து பார்த்த போது எந்திரத்தின் இரும்பு உதிரி பாகங்கள் காணவில்லை.
இதுகுறித்து ஜோசப்ராஜ் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி விசாரணை நடத்தியதில், சண்முகபுரத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (24) மற்றும் காளிமுத்து (34) ஆகிய இருவரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தராஜ் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருட்டு போன உதிரி பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.