பால் பரிசோதனை எந்திரத்தை திருடிய 2 பேர் கைது


பால் பரிசோதனை எந்திரத்தை திருடிய 2 பேர் கைது
x

பால் பரிசோதனை எந்திரத்தை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து அரசு பஸ்சில் கைலாசபுரத்தில் உள்ள பால் பரிசோதனை எந்திரம் பழுது பார்க்கும் கடைக்கு அனுப்பி வைத்த எந்திரம் காணாமல் போனது.

இதுகுறித்து சுரேஷ்பாபு (வயது 38) என்பவர் நெல்லை சந்திப்பு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்து செல்வகணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தாழையூத்தை சேர்ந்த காந்திராஜ் (40) மற்றும் டவுனை சேர்ந்த வீரமணி (68) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புடைய பால் பரிசோதனை செய்யும் எந்திரத்தை பறிமுதல் செய்தார்.


Next Story