கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது


கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது
x

கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

உவரி அருகே உப்பச்சம்பாட்டில் மாசானமுத்துசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பெரியதாழை சேவியர் காலனியை சேர்ந்த ஜெனிபர் (வயது 32), அவரது நண்பர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த லெனின் வினோத்குமார் (27) ஆகியோர் புகுந்து கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிவிட்டு, கோவில் மணியை திருட முயன்றனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, 2 பேரையும் பிடித்து உவரி போலீசில் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து கோவில் தர்மகர்த்தா பகவதி பாண்டியன் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தார்.


Next Story