மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது
x

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

வேதாரண்யத்தை அடுத்த மகாராஜபுரம் கீழ்பாதி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிகள்களை 3 பேர் திருடி சென்றனர். இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அவர்களை விரட்டி சென்று 3 பேரில் ஒருவனை பிடித்தனர். மற்ற 2 போ் தப்பி ஓடி விட்டனர்.

பிடிபட்ட நபரை கரியாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையல் அவர், காடந்தேத்தி கிராமம், தோப்படிக்குளத்தெருவைச் சேர்ந்த சந்திரசேகன் மகன் கரண் (வயது19) என்பதும், தப்பி ஓடியவர்கள் மணக்குடி மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் விக்னேஷ் (19), தலைஞாயிறு சந்தைவெளி பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் விக்னேஷ்(19) என்பதும், இவர்கள் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கரணை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கரியாப்பட்டினம் பகுதியில் பதுக்கியிருந்த விக்னேசை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு

மேலும் தப்பிய ஓடிய தலைஞாயிறு சந்தைவெளி பகுதியை சோந்்த தங்கராசு மகன் விக்னேசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story