சாலையோர இரும்பு தடுப்பு பட்டைகளை திருடிய 2 பேர் கைது


சாலையோர இரும்பு தடுப்பு பட்டைகளை திருடிய 2 பேர் கைது
x

சாலையோர இரும்பு தடுப்பு பட்டைகளை திருடிய 2 பேர் கைது

தஞ்சாவூர்

திருவோணத்தை அடுத்துள்ள ஊரணிபுரம்-உஞ்சியவிடுதி சாலை ஓரங்களில் நெடுஞ்சாலைத்துறை மூலம் இரும்பு பட்டையால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இரும்பு பட்டைகளை நேற்று மதியம் 2 வாலிபர்கள் உடைத்து திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த நெடுஞ்சாலை துறை ஆய்வாளர் லட்சுமணன் (வயது48) திருவோணம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவோணம் போலீசார் இரும்பு பட்டைகளை உடைத்து திருடி கொண்டிருந்த 2 வாலிபர்களையும் பிடித்து திருவோணம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெய்வேலி பகுதியை சேர்ந்த முருகேஷ் (29), பத்மநாதன் (22) ஆகியோர் என்பதும், இருவரும் சாலையோர இரும்பு தடுப்பு பட்டைகளை உடைத்து எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், பத்மநாதன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story