பதாகையை கிழித்து வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
பதாகையை கிழித்து வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டார்.
நொய்யல் அருகே குறுக்குச்சாலை பகுதியில் பரமத்தி வேலூர் அருகே கொளக்காட்டுப்புதூர் புதுவெங்கரை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக விளம்பர பதாகை வைக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பர பதாகையை சேமங்கி பகுதியைச் சேர்ந்த தருண் (வயது 20), வேட்டமங்கலம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (40) ஆகியோர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நொய்யல் குறுக்கு சாலை பங்களா நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (31) என்பவர் தருண், சுப்பிரமணியன் ஆகியோரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் கார்த்திக்கை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிந்து, தருண், சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.