கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது


கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
x

கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அடுத்த அவளூர் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேல்முருகன் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 42), முனிசாமி (48) ஆகிய இருவரும் கிராம நிர்வாக அலுவலரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர் அவளூர் போலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story