பஸ் கண்ணாடியை உடைக்க முயன்ற 2 பேர் கைது
தமிழக கவர்னரை திரும்பபெறக்கோரி பஸ் கண்ணாடியை உடைக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக கவர்னரை திரும்பபெறக்கோரி பஸ் கண்ணாடியை உடைக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பஸ் கண்ணாடியை உடைக்க முயற்சி
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு திடீரென வந்த 2 பேர் தமிழ்நாடு என்று உச்சரிக்க மாட்டேன் என்று கூறிய தமிழக கவர்னரை உடனே திரும்ப பெற வேண்டும் என கோஷமிட்டு கொண்டு அந்த வழியாக வந்த பஸ்சின் கண்ணாடியை அடித்து உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
2 பேர் கைது
பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், மயிலாடுதுறை சேந்தங்குடி தென்பாதியைச் சேர்ந்த சந்தானம் மகன் ஜெகன் (வயது 34),சேந்தங்குடி மதுரா நகரை சேர்ந்த சர்தார் மகன் முகமது சபீர் (29) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.