தொழிலாளியிடம் வழிப்பறி செய்ய முயன்ற 2 பேர் கைது
ஆத்தூரில் தொழிலாளியிடம் வழிப்பறி செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வடக்கு ஆத்தூர் பஸ்நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் ஆத்தூர் பேட்டை தெருவை சேர்ந்த கோபால் மகன் செந்தில் (வயது 41), மற்றொருவர் கொழுவை நல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சங்கர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் அப்பகுதியில் தனியாக நடந்து வந்து கொண்டு இருந்த ஒரு தொழிலாளியை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியதும், கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story