மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவச்சந்திரன்(வயது 36). இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று அதிகாலை சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வந்தார். அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிபன் வாங்க சென்றார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை மாற்று சாவி மூலம் 2 பேர் திருட முயன்றதை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் சிவச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருட முயன்ற திருச்சி சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த பார்த்திபன்(வயது 19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.