வாழை மரம் வெட்டிய தகராறில் 2 பேர் கைது


வாழை மரம் வெட்டிய தகராறில் 2 பேர் கைது
x

காவேரிப்பாக்கத்தில் வாழை மரம் வெட்டிய தகராறில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பாலையா நாயுடு தெருவை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி பத்மாவதி (வயது 50) கூலித் தொழிலாளி. அல்லன் அப்பாபு முதலி தெருவை சேர்ந்தவர் ராஜராஜசோழன் (53). இவர்களுக்கு இடையே கடந்த இரண்டு வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பத்மாவதி வீட்டின் அருகே இருந்த வாழை மரத்தை ராஜராஜசோழன் மற்றும் உப்புமேடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (48) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு வெட்டியதாக கூறப்படுகிறது.

இதனை பத்மாவதி மற்றும் இவரது கணவர் ஆகிய இருவரும் தட்டி கேட்டுள்ளனர். இதில் ஆவேசம் அடைந்த ராஜராஜசோழன், மணிமாறன் ஆகியோர் பத்மாவதியை தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பத்மாவதி நேற்று காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப் பதிவு செய்து ராஜராஜசோழன், மணிமாறன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story