நெய்வேலி அருகே போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் 2 பேர் கைது


நெய்வேலி அருகே போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அருகே போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள தொப்புளிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்து வந்த உத்தன்டி- ராஜேஸ்வரி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தையை தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து கொலை செய்தார். இதுதொடர்பாக தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த கமலம், கொலை வழக்கில் சாட்சி சொல்லாமல் இருக்க ராஜேஸ்வரி உறவினர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். ஆனால் ராஜேஸ்வரி குடும்பத்திற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், கமலத்தை கடந்த 24-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது. அப்போது அங்கு வந்த போலீசார், கொலை செய்ய முயன்ற கும்பலை தடுத்த போது, அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதையடுத்து தப்பி ஓடியவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கமலத்தை கொலை செய்ய சதித்தி்ட்டம் தீட்ட உதவியதாக நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பி-2 பிளாக்கை சேர்ந்த இளங்கோவன் மனைவி சுந்தரி (வயது 33), வடலூர் அருகே கல்லுக்குழி காலனியை சேர்ந்த கமலநாதன் மகன் விஜய்(24) ஆகியோரை டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பிடித்து தெர்மல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story