வடமாநில தொழிலாளி கொலையில் 2 பேர் கைது
ராஜபாளையம் அருகே வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சாலையில் சொக்கலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பிளாஸ்டிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சித் மான் ஜி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்தி தலைமையில் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தன.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.
2 பேர் கைது
அப்போது பீகார் மாநிலத்தை சேர்ந்த தாரோமான் ஜி (40), அவரது அண்ணன் வினோத் மான் ஜி (44) என்பதும், அவர்கள் இருவரும் சஞ்சித் மான் ஜி யை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி விட்டு விருதுநகர் சிறையில் அடைத்தனர்.