போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது
உசிலம்பட்டி
எழுமலை பகுதியை சேர்ந்த சிறுமி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி முடிந்து மாலை நேரம் தட்டச்சு பள்ளிக்கு செல்லும் வேளையில் மூன்று நபர்கள் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்கள். இதுகுறித்து எழுமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எ.பெருமாள்பட்டியை சேர்ந்த அஜய் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவருடன் இருந்த 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 21). இவர் தனது செல்போனில் அந்தப் பகுதியில் உள்ள சிறுமிகளை ஏமாற்றி ஆபாசமாக போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உசிலம்பட்டி நகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி நகர் போலீசார் அலெக்ஸ் என்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.