கஞ்சா விற்ற 2 பேர் பிடிபட்டனர்


கஞ்சா விற்ற 2 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:00 PM GMT (Updated: 2022-09-23T00:30:10+05:30)

கஞ்சா விற்ற 2 பேர் பிடிபட்டனர்

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பட்டிவீரன்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நெல்லூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 3 பேரிடம் விசாரணை நடத்த சென்றனர். இதற்கிடையே போலீசாரை பார்த்ததும் அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார்.

மற்ற இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மதுக்குமார் (வயது 32), விக்னேஷ் (26) என்பதும், தப்பியோடியது ஜெயபாபு என்பதும், 3 பேரும் சேர்ந்து கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் தப்பியோடிய ஜெயபாபுவையும் வலைவீசி தேடி வருகின்றனர்.Next Story