ஆற்று மணல் கடத்திய 2 பேர் சிக்கினர்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ஆற்று மணல் கடத்திய 2 பேர் போலீசாரிடம் சிக்கினர்
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை பகுதியில் ஸ்ரீவைகுண்டம் சந்தையடி தெருவை சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிராஜா என்ற ராசாக்கிளி (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளில் 11 மூட்டை ஆற்று மணலை கடத்தியது தெரியவந்தது. இதேபோல் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகா மற்றும் போலீசார் பொன்னன்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஸ்ரீவைகுண்டம் வெள்ளூர் பகுதியை சேர்ந்த இசக்கி மகன் கண்ணன் என்ற கருப்பசாமி (27) என்பவர் மோட்டார் சைக்கிளில் 10 மூட்டை ஆற்று மணலை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இசக்கிராஜா, கண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த 21 மூட்டை ஆற்று மணல் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.