வீடுகளில் திருடிய 2 பேர் சிக்கினர்


வீடுகளில் திருடிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 27 May 2023 11:58 PM IST (Updated: 27 May 2023 11:58 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் பகுதியில் வீடுகளில் திருடிய 2 பேர் சிக்கினர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புளிக்காரத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது60). இவரின் மகள் திருமணத்திற்காக வைத்திருந்த நகை பணம் முதலியவற்றை கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதேபோல, ராமநாதபுரம் ராணிசத்திர தெருவில் நேற்று முன்தினம் வீடு புகுந்து நகை பணம் குத்துவிளக்கு போன்றவை திருடுபோனது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த 36 வயது நபரும், திருவாரூர் கொறடாச்சேரி பகுதியை சேர்ந்த 35 வயது நபரும் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story