ஆடு திருடிய 2 பேர் கைது


ஆடு திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள தான்தோன்றி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 62), விவசாயி. கடந்த 24-ந் தேதி இரவு மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து அருணாச்சலம், மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று ஆடு திருடியதாக மருதகுளம் அருகே உள்ள தோட்டாக்குடி ஊரைச்சேர்ந்த மணி (24) மற்றும் பொன்னாக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தார். மேலும் அவர்களிடம் இருந்து 2 ஆடுகளையும் பறிமுதல் செய்தார்.


Next Story