செஞ்சி அருகே தனித்தனி சம்பவம்:விஷம் குடித்து 2 பேர் தற்கொலை


செஞ்சி அருகே தனித்தனி சம்பவம்:விஷம் குடித்து 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சி அருகே தனித்தனி சம்பவம்த்தில் விஷம் குடித்து 2 பேர் தற்கொலை செய்து கொண்டனா்.

விழுப்புரம்


செஞ்சி,

செஞ்சி அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் காந்தி மகன் அண்ணாதுரை (வயது 50). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர், சம்பவத்தன்று விஷத்தை எடுத்து குடித்தார். இதையடுத்து, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து அண்ணாதுரையின் மனைவி பூமல்லி கொடுத்த புகாரின் பேரில் நல்லான் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராஜா மகன் முரளி (46). குடும்ப பிரச்சினை காரணமாக இவர் விஷத்தை குடித்தார்.

இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலைமையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனாராம். இது குறித்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story