2 பேர் தற்கொலை


2 பேர் தற்கொலை
x

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி பால விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு சித்ரா (37) என்ற மனைவியும், முத்து சத்யா மற்றும் பொன் கார்த்தி என 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 16 ஆண்டுகளாக கணவரை பிரிந்து சித்ரா கீழ ராஜகுலராமன் என்ற பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்தநிலையில் முத்துவேல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கூமாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த முத்துவேலுவின் உடலை கைப்பற்றி வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (32). கட்டிடத்தொழிலாளி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் மனைவியுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதில் வினோத்குமார் வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோத்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


Next Story