வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 24 May 2023 1:00 AM IST (Updated: 24 May 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

சூளகிரி:-

வெவ்வேறு இடங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

குடும்ப தகராறு

பெங்களூரு ஆடுகோடி ஆனேபாளையத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் (வயது 30). இவருக்கும், அவருடைய மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்டு மதுரையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சுதர்சன் மனைவி சென்று விட்டார்.

இதில் மனம் உடைந்த சுதர்சன் சூளகிரி அருகே உள்ள குருபராத்பள்ளியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

முதியவர் தற்கொலை

சூளகிரி தாலுகா பீர்ப்பள்ளி அருகே சின்னகுதிபாலாவை சேர்ந்தவர் குருவப்பா (வயது 75). கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர் கல்லில் மோதி காயம் அடைந்தார்.

இதன் காரணமாக அடிக்கடி வலியால் அவதிப்பட்டு வந்த குருவப்பா, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story