வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
புதூரில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
புதூர்,
புதூரில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலை
மதுரை உத்தங்குடி சின்ன மங்கல குடியை சேர்ந்தவர் ஞானபண்டிதன் (வயது 42). இவர் ஷேர் மார்க்கெட்டில் வர்த்தகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு ஷேர் மார்க்கெட்டில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட ஞானபண்டிதன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி விஜயலட்சுமி புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணை
மதுரை காந்திபுரம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஒய்யதேவன் (46). இவரது மனைவி சங்கீதா (40). ஒய்யதேவன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை குணமடையாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஒய்ய தேவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின்பேரில் புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்.