வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சிவகாசி,
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தொழிலில் நஷ்டம்
திருத்தங்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன் (வயது 43). இவர் திருமண பத்திரிகை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்த ராஜேஷ்கண்ணனின் மனைவி பஞ்சவர்ணம் வீடு திரும்பிய போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து ராஜேஷ்கண்ணனின் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பஞ்சவர்ணம் திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்ெறாரு சம்பவம்
அதேபோல அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரத்தை சேர்ந்தவர் முத்து (45). தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி சந்தனமாரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.