வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x

மூன்றடைப்பு அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருநெல்வேலி

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே உள்ள பனையங்குளத்தைச் சேர்ந்தவர் நல்லக்கண்ணு மனைவி சுந்தரி (வயது 67). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை சுந்தரி குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூன்றடைப்பு மேலூரை சேர்ந்தவர் வேல்சாமி (67). இவருக்கு மரியபாக்கியம் என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். வேல்சாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி மரியபாக்கியம் கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வேல்சாமி வீட்டில் இருந்த திராவகத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story