வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சிவகாசி,
வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
முதியவர் தற்ெகாலை
சிவகாசி பாரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 68). இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் கிடைத்த வேலைகளை பார்த்துக்கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்த நிலையில் சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு கடையின் வெளியே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற ஊழியர்
அதேபோல சாத்தூர் தாலுகா கண்மாய்பட்டியை சேர்ந்தவர் மருதுபாண்டி (34), இவர் சாத்தூர் நீதிமன்றத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் மருதுபாண்டிக்கும், அவரது மனைவி அழகுராணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மருதுபாண்டி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த மருதுபாண்டியின் தாய் காளியம்மாள் அவரை மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மருதுபாண்டி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து காளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.