வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகரில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
முதியவர் சாவு
விருதுநகர் அருகே உள்ள வடபட்டியை சேர்ந்தவர் சதுரகிரி (வயது 70). இவர் தனது மனைவி கருப்பாயி அம்மாளுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் நோய் பாதிப்புக்காக அவ்வப்போது விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து மருந்து, மாத்திரைகள் வாங்கி செல்வது வழக்கம். சம்பவத்தன்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் விருதுநகர் பழைய ெரயில்வே காலனி அருகே நடைமேடையின் கடைசியில் முதியவர் சதுரகிரி இறந்து கிடந்தார். அருகில் பூச்சி மருந்து பாட்டிலும் கிடந்தது. நோய் பாதிப்பால் மனவேதனையடைந்த சதுரகிரி விஷம் குடித்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுபற்றி அவரது மகன் பொன்னையன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர்கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
விருதுநகர் பெரியார்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (57). குடும்பப்பிரச்சினை காரணமாக விஷம் குடித்த இவர் விருதுநகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி இவரது மகன் முனீஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.