மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; 2 பேர் பலி


மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதல்; 2 பேர் பலி
x

வள்ளியூர் அருகே, 4 வழிச்சாலையில் மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே, 4 வழிச்சாலையில் மோட்டார்சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

விபத்து

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூர் 4 வழிச்சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரோட்டை கடக்க முயற்சி செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் உடனடியாக கிடைக்கவில்லை.

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story