மத்திகிரி, குருபரப்பள்ளி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு


மத்திகிரி, குருபரப்பள்ளி பகுதிகளில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு
x
தினத்தந்தி 26 Jun 2023 1:15 AM IST (Updated: 26 Jun 2023 8:34 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

மத்திகிரி

மத்திகிரி, குருபரப்பள்ளி பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் இறந்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்

மத்திகிரி அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 20). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பரான வினய்குமார் (22) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பேளகொண்டப்பள்ளி பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டர் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் ஆனந்த், வினய்குமார் ஆகிய 2 பேரும் சாலையில் தவறி விழுந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி அவர்கள் மீது மோதியது. இதில் ஆனந்த், வினய்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஆனந்த் பரிதாபமாக இறந்தார். வினய்குமார் மேல் சிகிக்சைக்காக ஆனேக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொழிலாளி சாவு

குருபரப்பள்ளி அருகே உள்ள பெரிய புலியரசி சேர்ந்தவர் கிருஷ்ணன் (55). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி இரவு போலுப்பள்ளி அருகில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story