வெவ்வேறு இடங்களில் தீ விபத்தில் 2 பேர் சாவு
ஓமலூர் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் இறந்தனர்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த தின்னப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பேபி (வயது 70), இவர், தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த பேபி, சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதேேபால் பூசாரிப்பட்டி வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (58). உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் புகை பிடித்த போது வீட்டில் இருந்த மண்எண்ணெயில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயம் அடைந்த முருகேசன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.