வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி


வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
x

வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர்.

விருதுநகர்

சிவகாசி,

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.

வாலிபர் பலி

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் பழையூர் கோனார் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் மகன் வெங்கடேஷ் (வயது 32). இவர் சம்பவத்தன்று சிவகாசி-விஸ்வத்தம் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் வெங்கடேஷ் மீது மோதியதாக தெரிகிறது.

இந்த விபத்தில் வெங்கடேசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது தாய் காமாட்சி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

வெம்பக்கோட்டை ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த எலுமிச்சங்காய்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பகவான் தாஸ் (வயது32). இவர் இங்குள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். இவர் இருசக்கர வாகனத்தில் சிவசங்குபட்டி அருகே ெசன்ற போது வளைவில் எதிர்பாராதமாக தடுமாறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஏழாயிரம்பண்ணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தினர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பகவான்தாஸ் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story